Breaking
Fri. Dec 5th, 2025

கடந்த 20ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் படி 11 அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளது. அன்றையதினம் நள்ளிரவு முதல் இந்த புதிய விலை மாற்றம் நடைமுறைக்கு வரும் என நிதி அமைச்சு கூறியது.

எனினும், இதுவரை வரவு செலவுத் திட்ட சலுகை நுகர்வோரைச் சென்றடையவில்லை என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் இன்றையதினம் நாடுமுழுவதும் விஷேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க நுவர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

அத்துடன் அதிக விலைக்கு பொருட்களை விற்பவர்கள் குறித்து 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது நுகர்வோர் அதிகார சபைக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

By

Related Post