Breaking
Fri. Dec 5th, 2025

இலங்கையில் அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கிடைத்த, நிவாரணப் பொருட்களை மோசடி செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல்வேறு அமைப்புக்கள் மூலம் கிடைத்துள்ள நிவாரணப் பொருட்கள் பணத்திற்கு விற்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இவ்வாறு மோசடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மற்றும் இதற்கு துணைப்போவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் பலர் கைது செய்யப்படுவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post