Breaking
Fri. Dec 5th, 2025
SAMSUNG CAMERA PICTURES

– இர்ஷாத் றஹ்மத்துல்லா –

எனக்கு கிடைத்துள்ள அமைச்சுப் பெறுப்பை கொண்டு அனைத்து மக்களுக்கும் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ள கிராமிய,பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலி ஏற்கனவே தான் மூன்று முறை பிரதி அமைசை்சர் பதவியினை வகித்து மக்களுக்கு பணியாற்றியுள்ளதாகவும் கூறினார்.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக இன்று தமது கடமைகளை பொறுப்பெற்கும் நிகழ்வு கொழும்பு புஞ்சி பொரள்ளயில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம் பெற்றது.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்.மற்றும் ஏ.எச.எம்.பௌசி,பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி உட்பட பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மேலும் பிரதி அமைச்சர் அமீர் அலி பேசும் போது –

எனது கட்சி தலைவர் றிசாத் பதியுதீன்  எனக்கு இந்த பிரதி அமைச்சர் பதவியினை பெற்றுத்தர எடுத்த முயற்சிகளுக்கு நன்றி கூறுவது்டன்,ஜனாதிபதி,பிரதமர் மற்றும் எனது அமைச்சின் அசை்சர் பீ.ஹரிசன் ஆகியோரின் செயற்பாடுகளுக்கு எனது முழுமையான பங்களிப்பினை செய்ய தயாராகவுள்ளேன்.என்றும் பிரதி அமைச்சர் அமிர் அலி இதன் போது கூறினார்.

Related Post