Breaking
Fri. Dec 5th, 2025
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் திரு.டொம் மாலினோவ்ஸ்கிக்கும், பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முந்தினம் (13) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் ஹெட்டியாராச்சி மற்றும் திரு. மாலினோவ்ஸ்கி ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான உதவிச் செயலாளருக்கு பாதுகாப்புச் செயலாளரினால் நினைவுச்சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது திரு. மாலினோவ்ஸ்கியுடன் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை உதவிச் செயலாளர் திரு. மன்ப்ரீத் சிங், இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரி திரு. ரொபேர்ட் ஹில்டன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், இராணுவத் தளபதி, விமானப்படை தளபதி மற்றும் கடற்படை அதிகாரிகளின் பிரதானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

By

Related Post