அமைச்சர்களின் பொறுப்புக்கள் இன்று வர்த்தமானியில் வெளியாகும்!

இலங்கையின் அமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.

இதன்படி புதிய அமைச்சுக்கள் அதன் பொறுப்புக்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக அரச அச்சகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 19வது திருத்தத்துக்கு அப்பால் நாடாமன்ற அங்கீகாரத்துக்கு அமைய இன்னும் இரண்டு அமைச்சரவை அந்தஸ்து அமைச்சர்களும் மூன்று பிரதியமைச்சர்களும் நியமிக்கப்பட வேண்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.