Breaking
Sun. Dec 7th, 2025

மூன்று நாள் விஜயம் செய்துள்ள இக்குழுவினர் இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார மேம்படுத்தலுக்கும் ,முதலீடுகளை அதிகரிப்பதற்குமான உடன்படிக்கையை மேற்கொள்ளவுள்ளனர்.

கட்டார் நாட்டின் பொருளாதார வியாபார அமைச்சர் ஷேக் அகமட் பின் யாசின் பின் முகம்மட் அல்தானி மற்றும் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் முக்கியத்துவமிக்க இவ்வுடன்படிக்கையை கைச்சாத்திடவுள்ளனர்.

கைத்தொழில் மற்றும் வர்த்தகம் ,நிதி, நீதி,வெளிநாட்டு விவகாரம், மீன்பிடி மற்றும் நீரியல் வளம் , கலாச்சார மற்றும் கலை அலுவல்கள் ஆகிய அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் இலங்கை சார்பாக இக்குழுவில் இடம்பெறுகின்றனர் இக்குழுவினருக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமை தாங்கிச் செல்கின்றார்.

Related Post