Breaking
Sun. Dec 7th, 2025

வார இறுதி ராவய சிங்களப் பத்திரிகைக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரசாங்கம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் ஒரு அதிருப்தி நிலவுகின்றது. மஹிந்த சிந்தனை மூலம் வாக்குறுதியளிக்கப்பட்ட விடயங்கள் இதுவரை முழுமை பெறவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஒழிப்பு தொடர்பான வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

யுத்தம் முடிவுற்ற பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்களை ரத்துச் செய்யும் 18வது சட்டதிருத்தத்தை அரசாங்கம் கொண்டு வந்தது. நாங்களும் நிபந்தனையுடன் அதற்கு ஆதரவளித்தோம். ஆனால் இப்போது சுயாதீன ஆணைக்குழுக்கள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டுமென்று பொதுமக்கள் குரல் கொடுக்கின்றனர்.

இவை போன்ற விடயங்களால் நாளுக்கு நாள் அரசாங்கத்தின் மீதான அதிருப்தி அதிகரித்துக் கொண்டு செல்வதாக தெரியவருகின்றது.

அரசாங்கத்துக்கு இன்னும் இரண்டு வருட காலம் அதிகாரத்தில் இருக்க முடியும். எனவே இந்த இரண்டு வருட அவகாசத்தினுள் எமது வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு தேர்தலுக்குச் செல்லும்போது ஓரளவுக்கு வெற்றி வாய்ப்பை எதிர்பார்க்க முடியும். அதன் காரணமாக தற்போது ஆளுங்கட்சிக்குள்ளேயே பலரும் திடீர் தேர்தல் தொடர்பாக எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் டியூ குணசேகர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Related Post