அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கரிப்பு?

அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக காணப்படுவதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதன்படி அரசியல் கட்சியின் பிரதான உறுப்பினர்களில் ஐந்தில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதே ஆணைக்குழுவின் நிலைப்பாடு எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.