அலவி மௌலானாவின் மறைவு – அ.இ.ம.கா அனுதாபம் 

– ஊடகப் பிரிவு –

மேல் மாகாண சபையின் முன்னால் ஆளுனர் மர்ஹ¬ம் அஸ்ஸெய்யித் அலவி மௌலானா அவர்களின் மரணச்செய்தி ஆழ்ந்த கவலையை தந்துள்ளது. முஸ்லிம்களின் மூத்த அரசியல் வாதிகளில் ஒருவரான மௌலானா சமூகத்துக்கும், நாட்டுக்கும் செய்த சேவைகள் இலகுவில் மறக்கக்கூடியதொன்றல்ல.

சுதந்திரக்கட்சியின் ஆரம்ப காலத்திலிருந்தே, அக்கட்சியின் அங்கத்தவராக இருந்த அவர், கொள்கை பிரளாது கடைசிவரை அக்கட்சியிலேயிருந்து எல்லோரினதும் நம்பிக்கையையும் , நன்மதிப்பையும் பெற்றவராவார். சகலரிடமும் வேற்றுமை காட்டாது மும்மொழிகளிலும் சரளமாகவும் , அடுக்குத்தொடராகவும் நகைச்சுவையாகவும் பேசும் அவரின் பாவனையை யாரும் மறக்க மாட்டார்கள்.

தொழிலின் மகிமைக்கு முக்கியத்துவம் கொடுத்த மௌலானா அவர்கள் தொழில் சங்கவாதியாகவும் , தொழில் சங்கத் தலைவராகவும் , தொழில் சங்கத் சம்மேளனத்தலைவராகவும் 40 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு, சரித்திரம் படைத்த மாமனிதர் என்பதை கூறிக்கொள்ள பெருமை படுகிறோம்.

இனங்களுக்கு மத்தியில் நேசக்கரம் நீட்டி இன ஐக்கியத்தை ஏற்படுத்த அவர் செய்த முயற்சிகளையும், அர்ப்பணங்களையும் இந்த நாடு என்றும் மறக்காது.

எஸ்.சுபைர்தீன்
செயலாளர்நாயகம்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்