Breaking
Fri. Dec 5th, 2025

காடுகளை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (8) பகல் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அளுத்கடை நீதிமன்றிற்கு முன்னால் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த எதிர்ப்பு நடவடிக்கையானது ‘அளுத்கடையிலிருந்து ஆரம்பிப்போம்’ என்ற பெயருடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஊழல் எதிர்ப்பு முன்னணி உள்ளிட்ட பல இயற்கை பாதுகாப்பு அமைப்புக்கள் இதை ஒழுங்கு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என குறித்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

அழிவடைந்து வரும் இயற்கையை பாதுகாக்கும் செயல்திட்டத்தின் முதல் கட்ட நிகழ்வே இதுவென்றும் அவ்வமைப்பு சுட்டிகாட்டியுள்ளது.

By

Related Post