Breaking
Fri. Dec 5th, 2025

நேற்றிரவு(22) அளுத்கம பகுதியில் முஸ்லிம் வர்த்தகர்க்கு சொந்தமான பிரபல “மல்லிகாஸ்” எனும் மூன்று மாடி சொகுசு ஆடை கடை முற்றாக தீ பிடித்து கருகியுள்ளது.

திடீர் தீ அனர்த்தத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சுமார் 10:30 மணி முதல் குறித்த இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதுள்ளதாக நம்பப்படுகின்றது.

தீ அணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகையில், ஆடை கடை முழுமையாக எரிந்துள்ளது.

கடந்த காலத்தில் அளுத்கம இனக்கலவரத்தின் போது குறிப்பிட்ட கடைக்கு இனவாதிகளால் 2 தடவைகள் தீ வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அழுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் நேற்றையதினம் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போது குறித்த பகுதியானது வழமைக்கு திரும்பியுள்ளது.

இதேவேளை தீயை பார்த்த அதிர்ச்சியில் அளுத்கம,தர்ஹா நகரைச் சேர்ந்த முஹமட் ஹில்மி (52) வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்

உயிரிழந்தவரின் உறவுக்காரர் ஒருவரின் கடையும் (அஸ்மா ஸ்டோர்ஸ்) சிறிதளவு தீ பிடித்துள்ளது.

பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

By

Related Post