அவசரமாகக் கூடுகிறது பொருளாதாரக் குழு!

அரசாங்கத்தின் பொருளாதாரக் குழு அவசரமாக இன்று (16) கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர்  ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மின்வலு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பொருளாதாரக் குழுவில் மின்வலு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் அங்கம் வகிக்காத  நிலையிலும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்தடை உள்ளிட்ட நெருக்கடிகள் குறித்து ஆராயும் நோக்கில், மின்வலு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோருக்கும்  பொருளாதாரக் குழு அழைப்பு விடுத்துள்ளது.