Breaking
Fri. Dec 5th, 2025

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தின் பிரதான வீதியை அண்டி அமைந்துள்ள பெரிய சந்தைக்கு முன்பாக புதன்கிழமை (06) இரவு சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டது.

இந்தச் சிறுத்தை எங்கிருந்து வந்தது என்பதுடன்,  எதனால் இறந்துள்ளது என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை வனவளத் திணைக்களத்திடம் இந்தச் சிறுத்தையின் உடலத்தை பொலிஸார் ஒப்படைத்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

உணவு தேடி இந்தச் சிறுத்தை நகருக்குள் வந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

By

Related Post