இணக்கசபை வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நீதி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய, 13 மாவட்டங்களில் இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பப்படவுள்ளன.
இதன்படி  கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார், பதுளை, கண்டி, கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை, காலி, மொனராகலை, கேகாலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதுடன் இணக்க சபைகளை வலுவூட்டுவதன் ஊடாக பிரதேச மட்டத்தில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
வருடமொன்றிற்கு சுமார் 2 இலட்சம் முறைப்பாடுகள் இணக்க சபைகளுக்கு கிடைப்பதுடன் அவற்றில் நூற்றிற்கு 50 வீதமான முறைப்பாடுகளுக்கு இணக்கப்பாடு எட்டப்படுவதாகவும் நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.