இந்திய ஏற்றுமதி கண்காட்சி -2015

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்திய ஏற்றுமதி கண்காட்சி -2015 இன்று வைபவரீதியாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்தியாவின் 50 க்கும் மேற்பட்ட முன்னணி கைத்தொழில்,வர்த்தகம்,விசாயம்,மருந்தகம்,கட்டிட நிர்மாணிப்பு,ஆடை தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம்,சக்தி வளத்துறை சார்ந்த நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் தமது தாயரிப்புக்களை காட்சிபடுத்துகின்றன.