Breaking
Fri. Dec 5th, 2025

அப்துல்லாஹ்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை – பாவற்கொடிச்சேனையில் ஞாயிறு பிற்பகல் இரண்டு வயது குழந்தையொன்று வாய்க்காலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

ஏறாவூர், ஐயங்கேணியை சேர்ந்த கிருஸ்ணகுமார் சமிற்றா (இரண்டரை வயது) எனும் பெண்குழந்தையே உயிரிழந்துள்ளது.

ஏறாவூர் ஐயன்கேணியில் இருந்து உன்னிச்சை பாவற்கொடிச்சேனைக்கு உறவினர்களிடம் வந்திருந்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாய்க்காலுக்கு அருகில் உறவினர்களது வீடு இருந்ததாகவும் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அருகிலிருந்த வாய்க்காலில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

குழந்தையின் சடலம் தாண்டியடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

பெற்றோரின் கவனயீனமே குறித்த குழந்தை உயிரிழந்ததற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post