வவுனியா மாவட்டத்துக்கு நேற்று விஜயம் செய்திருந்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இரண்டாவது நாளாக இன்றைய தினம் (18) மதீனாநகர், மரக்காரம்பழை, ஹிஜ்ராபுரம், புளிதரித்த புளியங்குளம், அண்ணாநகர், சூடுவெந்தபுலவு (பழையது), சூடுவெந்தபுலவு (புதியது), றஹ்மத் நகர், அறபாநகர், பாவற்குளம், பட்டாணிச்சூர் மற்றும் மினாநகர் ஆகிய பிரதேச மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.
06 மாதகால அநியாய சிறைப்படுத்தலின் பின்னர், தமது பிரதேசத்துக்கு வருகை தந்த தலைவர் ரிஷாட் பதியுதீனை, மக்கள் அன்புடன் வரவேற்று நலம் விசாரித்தனர்.
இதேவேளை, தனது விடுதலைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் தலைவர் ரிஷாட் பதியுதீன், தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.






















