Breaking
Mon. Dec 15th, 2025

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளல், 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரஜாவுரிமை சட்டம் 1948ஆம் 18 ஆம் இலக்கத்தின் கீழ் இலங்கையுடன் இரட்டைக்குடியுரிமை உடன்படிக்கையை கொண்டுள்ள 7 நாடுகளின் பிரஜைகள் இரட்டைக்குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், சுவீடன், சுவிட்ஸலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் பிரஜைகள் இலங்கையில் இரட்டைக்குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பங்களையும் விபரங்களையும் www.immigration.gov.lk என்ற இணைத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.

Related Post