Breaking
Mon. Dec 15th, 2025

கொழும்பு – கண்டி வீதியின், இபுல்கொட பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பினரால் இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

2012ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி கொழும்பு – கண்டி வீதியின் இபுல்கோட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

களனிய பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் ருகுணு பல்கலைக்கழக மாணவர் ஒருவருமே இவ்வாறு பலியானமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post