Breaking
Mon. Dec 8th, 2025

புகழிடக் கோரிக்கையாளர்களை இலங்கை திருப்பியனுப்புவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.இலங்கையில் அரசியல் தஞ்சமடைந்துள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டு, திருப்பி அனுப்பப்படுவதாக, புகழிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான ஐநா ஆணையாளர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.அவ் அறிக்கையில் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதியில் இருந்து 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 62 பாகிஸ்தானியர்கள் மற்றும் மூன்று ஆப்கானிஸ்தான் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.இவர்களில் சுமார் 40 பேரை திருப்பியனுப்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் புகழிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் நாளாந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Post