இலங்கையில் மரணதண்டனையை மீள நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பு

இலங்கையில் எந்தக் காரணத்திற்காகவும் மரணதண்டனையை மீள நடைமுறைப்படுத்துவதை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக எதிர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது நிலைப்பாட்டை பலமுறை தெளிவாக தெரிவித்துள்ளது, இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை,என  ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்து சிந்தித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.