Breaking
Mon. Dec 15th, 2025
இலங்கையிலுள்ள 40 வீதமான ஆண்களும் 2 வீதமான பெண்களும் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக ஹெல்தி லங்கா நிலையத்தின் வேலைத்திட்டப் பணிப்பாளர் சாமிக ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
காலி மாவட்டத்தில் நலன்புரி அமைப்புகள் முன்னெடுத்துள்ள மது ஒழிப்புத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் குறித்த தகவலைத் தெரிவித்தார்.
வளர்ந்தோரில் ஒவ்வொரு இலட்சம் பேருக்கும் 33.4 சதவீதமானோர் ஈரல் அழற்சி நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 20 சதவீதமானோர் மதுவால் பாதிக்கப்பட்டவர்களே.
எனவே,மது மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நலன்புரி அமைப்புகள் தொடர்ந்தும் செயற்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

By

Related Post