Breaking
Fri. Dec 5th, 2025

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைத் தொடர்பான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையும், அதற்கான இலங்கை அரசாங்கத்தின் பதிலும் இன்று ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் உத்தியோகப்பூர்வமாக பேரவையில் சமர்ப்பிக்கப்படுகிறது.

இதையடுத்து இந்த அறிக்கை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அதேவேளை, இந்த விவாதத்தின் ஒரு கட்டமாக, கடந்த 24ஆம் திகதி அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான தீர்மான விரைவு குறித்தும் விவாதிக்கப்படும்.

இந்தத் தீர்மான வரைபுக்கு அமெரிக்கா, இலங்கை, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, மசிடோனியா, மொன்ரெனிக்ரோ ஆகிய நாடுகள் இணை அனுசரணை வழங்கவுள்ளன. இந்தத் தீர்மான வரைபு இன்று ஏகமனதாக சகல நாடுகளின் ஆதரவுடனும் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, இந்தத் தீர்மான வரைபில் இன்று சில திருத்தங்கள் முன்வைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அவ்வாறான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடாத்தப்படும் நிலை ஏற்பட்டால், நாளைய தினம் இந்தத் தீHமானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.(SMR)

Related Post