இளைஞரின் கொலையுடன் தொடர்புடைய நால்வர் கைது!

மீகஹவத்தை – சியம்பலாபேவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நவகமுவ பகுதியில் வைத்து பேலியகொடை குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

சியம்பலாபேவத்தை பகுதியில் கடந்த முதலாம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கத்திகள் நான்கையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களை இன்று மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.