Breaking
Fri. Dec 5th, 2025
தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது பணம் அல்லது நன்கொடை தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களென யாராவது கேட்டால் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
பணம் அல்லது நன்கொடை ஆகியவற்றின் ஊடாக பெற்றோரிடம் இலஞ்சம் வாங்கும் சகலருக்கும் எதிராக தமது சங்கம், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில்,  எந்தவொரு பெற்றோரும் 0112458058 – (call us)
என்றத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

By

Related Post