உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அழைப்பாணை

உச்ச நீதிமன்ற நீதியரசர் சரத் டி ஆப்ரூ அடுத்த வருடம் ஜனவரி 12ம் திகதி நீதிமன்றத்திற்கு முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணொருவரை தாக்கியது தொடர்பில் நீதியரசருக்கு எதிராக கல்கிஸ்ஸ காவற்துறைக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

இவ்வழக்கு  நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன குறித்த உத்தரவை பிறப்பித்தார்.