Breaking
Fri. Dec 5th, 2025

ஜனாதிபதி சட்டத்தரணி திரு.பிரசன்ன சுஜீவ ஜயவர்தன உயர் நீதிமன்ற நீதியரசராக இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில்  சத்தியப்பிரமாணம் செய்தார்.

அத்துடன் பாரதூர ஊழல், மோசடி மற்றும் அரச சொத்துக்கள், வரப்பிரசாதங்கள், அதிகாரம் ஆகியவற்றை முறைகேடாக பயன்படுத்துதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினராக மேல் நீதிமன்ற நீதிபதி திரு.பியசேன ரணசிங்க இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோனும் இதில் கலந்துகொண்டார்.

By

Related Post