Breaking
Fri. Dec 5th, 2025

– ஜவ்பர்கான் –

மட்டக்களப்பு உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.மோகனராஜா தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த 5 தினங்களாக மழை பெய்து வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உறுகாமம் குளத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 3 அங்குலம் நீர்பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இந்த குளத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் இந்த குளத்தினை அண்டியுள்ள முந்தனையாறு நிரம்பிக் காணப்படுவதாகவும் இதே நேரம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எந்தவொரு குளத்திற்கும் இதுவரை பிரச்சினை இல்லை எனவும் தொடாச்சியாக எமது திணைக்கள அதிகாரிகளினால் குளங்கள் அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

By

Related Post