Breaking
Fri. Dec 5th, 2025

மின்னேரியா கிராமங்களில் யானைகள் புகுந்து நாசம் விளைவிப்பது தொடர்பாக செய்தி திரட்டச் சென்ற பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் யானை தாக்கி நேற்று அதி காலை உயிரிழந்துள்ளார். 46 வயதான பிரியந்த ரத்நாயக்க என்பவரே இவ்வாறு இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிராமத்திற்குள் புகுந்த யானையை வீடியோ செய்ய முற்பட்ட போது திடீரென வந்த யானை ஊடகவியலாளரை தாக்கியுள்ளது. தலையில் பலத்த காயங் களுடன் காணப்பட்ட இவர் ஹிங்கு ராக்கொட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவருடன் வேறு சில பிரதேச ஊடகவியலாளர்களும் செய்தி திரட்டுவதில் ஈடுபட்ட போதும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என அறிய வருகிறது. கிராமத்தில் யானை புகுந்திருப்பது குறித்து மின்னேறிய வனவள திணைக்கள அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்ட போதும் அதிகாரிகள் உரிய நேரத்தில் சமுகமளிக்கவில்லை என குற்றஞ்சாட்டப் படுகிறது.

யானைகளினால் அடிக்கடி மின்னேரியா, பாசியாவெவ கிராம மக்களுக்கு பல் வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post