ஊத்துச்சேனை பிரதேசத்தில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

நேற்று 19.02.2017 ஆம் திகதி ஊத்துச்சேனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மோகன்  தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் , மீனவர்களுக்கான மீன் பிடி வலை, மண்வெட்டி, மற்றும்  சோளன் விதைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்குவதன் மூலம்  அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் தொளபிக், முஸ்தபா கலீல், ஜெயந்தியாய அபிவிருத்தி குழு செயலாளர் முஸ்தக்கீன்  மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.
1