Breaking
Mon. Dec 15th, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பிலான தகவல்களை நூல் வடிவல் ஆவணப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊழல் மோசடிகளுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க இந்த தகவல் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளுக்கு எதிரான குரல் அமைப்பிற்கு அண்மைக் காலங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்இ ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் நூல் வெளியிடப்பட உள்ளது.

லஞ்ச ஊழல் ஆணைக்குழு, குற்றவியல் விசாரணைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு இந்த ஆவணங்களின் பிரதிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பணத்தை மோசடியான முறையில் பயன்படுத்திய நபர்கள் பற்றிய தகவல்களை சமூகம் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.(sm

Related Post