எம்பிலிபிட்டிய ஏ.எஸ்.பி.க்கு பிணை

எம்பிலிபிட்டியவில் சுமித் பிரசன்ன ஜயவர்தன என்ற குடும்பஸ்தரின் மரணத்துக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமிந்த தர்மரத்ன இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

20 ஆயிரம் ரூபாய் காசுப்பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும்  அவரை விடுவிக்குமாறும் எம்பிலிபிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி குமாரி எம்.அபேரத்ன உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குறித்த பொலிஸ் அத்தியட்சகரின் கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பணித்துள்ளார்.