Breaking
Fri. Dec 5th, 2025

ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் அதிகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

சிறிகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று  (25)முன்தினம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட செயற்குழுக் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

கட்சியில் ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டமைப்பு மாற்றங்கள், சங்கங்கள் மற்றும் கிளைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, மே தினக் கூட்ட ஏற்பாடுகள் குறித்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பிரதமர் இதன் போது பாராட்டு வெளியிட்டுள்ளார்.

அத்துடன், அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

By

Related Post