ஐக்கிய நாடுகள் அமைப்பின் இரண்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
நீதவான்கள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனத்தன்மை குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி மொனிகா பின்டோ மற்றும் சித்திரவதைகள் மற்றும் கொடூர நடவடிக்கைகள், பொருத்தமில்லா தண்டனை விதித்தல் தொடர்பிலான விசேட ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஜூவான் மென்டோஸ் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
எதிர்வரும் 29ம் திகதி முதல் 6ம் திகதி வரையில் அவர்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

