ஐ.நா விசாரணைகள் அரசியல் ரீதியிலான நோக்கங்களை கொண்டது – ஜனாதிபதி

ஐ.நா பொதுச்சபைக்கான தனது உரையின்போது  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவை கடுமையாக சாடியுள்ளார். இடம்பெற்ற உரையில் ஐநா மனித உரிமைகள் ஆணைக் குழுவின் விசாரணைகள் அரசியல் ரீதீயிலான நோக்கங்களை கொண்டது  அளவுக்கதிகமானது என குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்திற்க்கு பிந்திய இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உள்ள சிலரின் தீய நோக்கத்துடனா நிகழ்ச்சிநிரலிற்கு துரதிஸ்டவசமாக பலியாகியுள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுச்சபை முன் உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் நாடு எட்டியுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை  மனித உரிமை பேரவை கணக்கிலெடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எனது நாடு அளவுக்கதிகமான முறையில் இலக்குவைக்கப்படுகின்றது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையை விட உலக நாடுகள் கவனம் செலுத்தவேண்டிய அவசர விடயங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாடொன்றின் சமூக. கலாச்சார, பாரம்பரியங்களை கணக்கிலெடுக்காமல் இடம்பெறும் வெளிநாடுகளின் தலையீடுகள் அந்த நாட்டை பலவீனப்படுத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.