Breaking
Fri. Dec 5th, 2025
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்ட அமர்வுகளில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.இலங்கைப் படையினரை அதிகளவில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்த ஜனாதிபதி விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஏனைய உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் ஹல் ஹ_செய்னை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Related Post