ஒருபோதும் அரசு சமஷ்டியை வழங்காது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒருபோதும் சமஷ்டி அடிப்படையிலான நிர்வாக முறையொன்றை வழங்காது என்று அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையான இனப்பிரச்சினைக்குத் தீர்வாக சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் ஊடகமொன்று கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.