ஒரு இலட்சத்து 30.000 சவூதி ரியால்களை, கடத்திச்செல்ல முயன்றவர் கைது

சட்டவிரோதமான முறையில் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் சவூதி ரியால்களை கடத்திச் செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க பிரிவு அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அதன் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
குறித்த நபர், நேற்றிரவு யூ.எல் 281 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ஜித்தா நகர் நோக்கி புறப்பட இருந்ததாக லெஸ்லி காமினி தெரிவித்தார்.
தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை ரூபாய்படி 46 இலட்சத்து 87,254 ரூபாய் பெறுமதியான சவூதி ரியால்களையே கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார்.