Breaking
Fri. Dec 5th, 2025

கடவுச்சீட்டில், அதன் உரிமையாளரது கைவிரல் அடையாளத்தைப் பதிவதை கட்டாயமாக்கும் சட்டமூலமொன்று, இன்று திங்கட்கிழமை (27), நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, கடவுச்சீட்டொன்றுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரி அல்லது கடவுச்சீட்டை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரியானவர், தனது கைவிரல் அடையாளத்தை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திடம் வழங்க வேண்டும் என்பது இந்த சட்டத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து கூட்டமைப்பின் நிலையான மற்றும் காலவரையறையின்றிய திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Post