கடுகண்ணாவ மண் சரிவு: தாயும் மகனும் ஜனாஸாவாக மீட்பு

கண்டி, கடுகண்ணாவ, இழுக்வத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதையுண்டு காணாமல் போன இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

15 வயதுடைய சிறுவனின் சடலமும் தாயொருவரின் சடலமும் இவ்வாறு மீட்கப்பட்டதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஏனைய நால்வரையும் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

கண்டி, கடுகண்ணாவ, இழுக்வத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 06 பேர் மண்ணுக்குள் புதையுண்டு காணாமல் போயிருந்தனர்.