கண்டி தேர்தல் வரலாற்றில் லக்ஸ்மன் கிரியல்ல புதிய சாதனை….!

கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி குழுத்தலைவர் லக்ஸ்மன் கிரயல்ல பெற்றுக்கொண்ட  விருப்பு வாக்குகள் கண்டி தேர்தல் வரலாற்றில் புதிய சாதனையாக கருதப்படுகிறது.

இதுவரை இடம்பெற்ற தேர்தல்களில் தனியொருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய விருப்பு வாக்குகளாக  முன்னாள் சிரேஷ்ட அரசியல் தலைவர் காமினி திசாநாயக்க அதிகப்படியாக ஒருலட்சத்து தொண்ணுற்று எட்டாயிரம் வாக்குகளை  பெற்றிருந்தார் . அதற்கு அடுத்தபடியாக மாகாண சபையில் எஸ் பி திசாநாயக்க ஒரு லட்சத்து எண்பத்து எட்டாயிரம் வாக்குகள் பெற்றிருந்தார்.

இந்த விருப்பு வாக்கு சாதனைகளை முறியடித்து லக்ஸ்மன் கிரியல்ல ஒருலட்சத்து தொன்னூற்று ஒன்பதாயிரம் வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.