Breaking
Fri. Dec 5th, 2025
(அப்துல் சுகைர் லத்தீப்)
கல்முனை வடக்கு இளைஞர் அமையம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பூரணமாக ஆதரிப்பது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கும் அதன் வேட்பாடளர்களின் வெற்றி வாய்ப்புக்காகவும் வெளிப்படையாக களமிறங்கி செயற்படுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கல்முனை வடக்கு இளைஞர் அமையத்தின் தலைவர் ஏ.எச்.எம் பூமுதீன் தலைமையில் நடைபெற்ற விஷேட தேர்தல் கலந்துரையாடலின் போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்முனை வடக்கு பிரதேசத்தில் கிராம சேவகர் பிரிவு ரீதியாக உள்ள அமையத்தின் தலைவர்களை மட்டும் அழைத்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்து வரும் ஓரிரு தினங்களுக்குள் அமையத்தின் அங்கம் வகிக்கும் 400 இளைஞர்களையும் ஒன்று கூட்டி தீர்மானத்தை அறிவிப்பது என்றும் இணக்கம் காணப்பட்டது.
அமையத்தின் மிக முக்கிய பிரமுகரும் அ.இ.ம.கா வேட்பாளருமான சித்திக் நதீரும் கலந்து கொண்டார்

Related Post