Breaking
Fri. Dec 5th, 2025
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்ப்பிக்கப்படவுள்ளதாக திருகோணமலை வளாக முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மாணவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி தங்களின் விடுதிக்கு சமூகமளிக்க முடியும் எனவும், திருகோணமலை வளாகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான ஒழுக்காற்று குழுவின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய விசாரணை அறிக்கை கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post