காத்தான்குடியில் குண்டு வெடிப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ.எல்.எஸ்.மாவத்தையல இன்று பகல் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில்  குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
ஏ.எல்.எஸ்.மாவத்தையில் 58ஆம் இலக்க வீட்டின் அருமையிலுள்ள வெற்று வளவு ஒன்றை கூட்டி துப்புரவு செய்து கொண்டிருந்தபோது குப்பைக்குள்ளிருந்த குண்டே வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 2 பிள்ளைளின் தந்தையான எச்.எம். இர்சாத் என்ற 32 வயது குடும்பஸ்தரே படுகாயமடைந்தவராவார்.
சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.