காற்று மாசடைதலில் கண்டி முதலிடம் – ஜனாதிபதி

கொழும்பு நகரத்தை தோல்வியடைய செய்து காற்று மாசடைதலில் கண்டி நகரம்  முதலிடத்துக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

இலங்கையின் காற்று மாசடைதல் தொடர்பிலான ஆறாவது தேசிய மாநாடு நேற்று  (5) மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

பத்தரமுல்லையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.