Breaking
Fri. Dec 5th, 2025
இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் டெஸ்ட் அணித் தலைவர் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க கிரிக்கெட் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

கிரிக்கெட் சபையின் பிரதித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காகவே அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

கிரிக்கெட் தேர்தல் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ளதோடு அமைச்சர் அர்ஜுண ரணதுங்க வேட்புமனு தாக்கல் செய்த சந்தர்ப்பத்தில் முன்னாள் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உபாலி தர்மதாஸவும் கலந்துகொண்டுள்ளார்.

தலைமைத்துவதற்கு போட்டியிடுமாறு அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அதனை அவர் மறுத்ததாக தெரிவித்துள்ளார்.

தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக இருந்தால் கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழுவில் இரண்டு வருடம் சேவையாற்றியிருக்க வேண்டும்.

எனவே தற்போது நல்லாட்சி நிலவுகின்றமையால் அந்த சட்டங்களை மீறி செயற்படவில்லை என்பதோடு பிரதித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த முறை கிரிக்கெட் தேர்தலில் தலைவர் பதவிக்காக முன்னாள் செயலாளர் நிஷாந்த ரணதுங்க மற்றும் முன்னாள் தலைவரும் பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

By

Related Post