Breaking
Fri. Dec 5th, 2025

கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் வெளிவாரிப் பரீட்சைகள் நாளை 11 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டங்கள், மற்றும் விரிவாக்கற் கற்கைள் நிலையம் அறிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகத்தினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிவித்தலில், தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் தற்போது மீண்டும் 11.06.2016 இலிருந்து தொடர்ந்து நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளதால், பரீட்சார்த்திகள் அனைவரும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்த அட்டவணையின் பிரகாரம் பரீட்சைகளுக்கு சமூகம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 04.06.2016 மற்றும் 05.06.2016 தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகளின் திகதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By

Related Post