குடிப்பழக்கத்தால் உருவாகும் நோயில் இலங்கைக்கு உலக தரவரிசையில் முதலிடம் …????

உலகில் கல்லீரல் பாதிப்படையும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் இலங்கை முதலிடத்தை அடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிரோசிஸ் என அழைக்கப்படும் கல்லீரல் பாதிப்படையும் நோய் குடிப்பழக்கத்து அடிமையானவர்களை அதிகம் ஆட்கொள்ளும் ஒரு நோய் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஒரு லசத்துக்கு முப்பத்து மூன்று பேருக்கு இந்த நோய் இருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை இந்த நோயையும் குடிப்பழக்கத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தில் இலங்கையில் பத்துலட்சம் லிட்டருக்கும் அதிகமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டிருந்தது …..