குருணாகலில் கோர விபத்து!

குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

கலேவெல என்ற பகுதில் இன்று காலை இடம்பெற்ற விபத்தின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.