குளவித் தாக்குதல்: 10 பேர் பாதிப்பு

– க.கிஷாந்தன் –

லிந்துலை  – பேரம் தோட்டத்தில் 10 தோட்ட தொழிலாளர்கள் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிகிச்சை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்  இன்மையால் மருந்துகளை தனியார் மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்ததால் பாதிக்கப்பட்டோர் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.